தைப்பிங், டிச 30 – Pokok Asamமில் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளுக்கு தீயூட்டிய
துரோகச் செயலில் ஈடுபட்டதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை பீசாங் கோரிங் வியாபாரம் செய்துவரும் பெண்மணி ஒருவர் ஒப்புக்கொண்டாதோடு நீதிமன்றத்தில் பல முறை அழுதார். நீதிபதி Nabisha Ibrahim முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 43 வயதுடைய ரபிடா ஸைனுல் அபிடின் ( Rafeda zainul Abidin) ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம்தேதி தீர்ப்பு வழங்குவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது.
7,000 ரிங்கிட் மதிப்புள்ள Honda RSX Honda மோட்டார் சைக்கிளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தில் அதற்கு தீவைத்தாக ரபிடாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 26 ஆம்தேதி மாலை மணி அளவில் 3.50 அளவில் Pokok Asam ஜாலன் மஸ்ஜித்தில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 14ஆண்டுகள்வரை சிறை மற்றும் அபாராதம் விதிக்கப்படும் தண்டனை சட்டத்தின் 435ஆவது விதியின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ரபிடாவுக்கு 4,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.