Latestமலேசியா

ரமணனின் RM800,000 சம்பளமும் சலுகையும் தொகுதி மக்கள் நலனுக்கே

சுங்கை பூலோ, மார்ச்-19-சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், 2023-ஆம் ஆண்டிலிருந்து தனது சம்பளம் மற்றும் இதரச் சலுகைகளைச் சேர்த்து சுமார் RM800,000 தொகையை தொகுதி மக்களுக்கே பங்களித்துள்ளார்.

அண்மையில் கூட பள்ளிவாசல்கள், சூராவ்கள், கோவில்கள், ஆலயங்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு RM65,200 வழங்கினார்.

இதற்கு முன், RM80,350 தொகையை இஹ்யா ரமலான் நிகழ்ச்சிகளுக்கும், சமூக திட்டங்களுக்கும் ஒதுக்கியிருந்தார்.

தவிர, நோன்புப் பெருநாளை ஒட்டி சுங்கை பூலோ B40 மக்களுக்கு 3,350 உணவுக் கூடைகளையும் 10,000 _bubur lambuk_ நோன்பு கஞ்சி பொட்டலங்களையும் விநியோகித்துள்ளார்.

“இது தொகை பற்றியது அல்ல; பொறுப்புணர்வு பற்றியது” என, பி.கே.ஆர் உதவித் தலைவருமான அவர் அறிக்கையொன்றில் வலியுறுத்தினார்.

“வாக்குறுதிகள் கொடுத்தால் மட்டும் போதாது, அவற்றை நடைமுறைப்படுத்தும் தொடர்ச்சியான செயல் தான் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் உருவாக்கும்” என பளிச்சென அவர் சொன்னார்.

2022 பொதுத் தேர்தலில் கைரி ஜமாலுடின் உட்பட 7-முனைப் போட்டியைச் சமாளித்து பக்காத்தான் ஹராப்பானுக்காக சுங்கை பூலோவைக் கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் ரமணன்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!