
ஷா ஆலாம், அக்- 14–கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், கிள்ளான், Jalan Limbunganனில் உள்ள ரயில் நிலையத்தில் SUV ரக வாகனம் ஒன்று ரயில் தண்டவாளத்தில் ஓட்டிச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து KTMB விசாரணை நடத்தி வருகிறது.
கோலாலம்பூரிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 60 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் இரவு சுமார் 11.40 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் அவ்வாகனத்தை சுமார் 130 மீட்டர் தூரம் ஓட்டிச் சென்றதாக தென் கிள்ளான் காவல் துறைத் தலைவர் ACP Lim Jit Huey தெரிவித்தார்.
அதிகாலை சுமார் 1.40 மணியளவில் KTMB பணியாளர்கள் வாகனத்தைத் தண்டவாளத்திலிருந்து அகற்றினர். அச்சம்பவம் தொடர்பில் 1991ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் பிரிவு 62-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ரயில் தண்டவாளத்தில் SUV வாகனம் நிற்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் முன்னதாக வைரலானது. வாகனமோட்டி மதுபோதையில் இருந்ததாகத் தகவல்கள் பரவிய நிலையில், அதனை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.



