Latestமலேசியா

லாரி விபத்தில் SKVE-யில் 30 மீட்டர் தூரத்துக்கு Zinc Oxide கசிவு

ஷா ஆலாம், அக்-1-மேற்குக்கரை நெடுஞ்சாலை WCE நோக்கிச் சென்ற லாரி ஒன்று இன்று காலை SKVE நெடுஞ்சாலையின் A0.2 ஆவது கிலோமீட்டர் பகுதியில் விபத்துக்குள்ளானதில், சுமார் 30 மீட்டர் தூரத்துக்கு Zinc Oxide சாலையில் சிந்தியது.

லாரியில் தலா 200 கிலோ எடையுள்ள 120 உருளைக் கலன்களில் ரசாயனங்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Ashbar தெரிவித்தார். காலை 8.07 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தெலுக் பங்ளிமா காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து வாகனம் ஒன்று சம்பவ இடத்தைச் சென்றடைந்தது.

வளைவில் திரும்பும்போது லாரியின் பூட்டு திறந்து, ரசாயனக் கலன்கள் கீழே விழுந்து உடைந்ததாக ஓட்டுநர் தெரிவித்ததாக அவர் கூறினார். அதனால் அதிலிருந்த துத்தநாக Zinc Oxide சாலையில் கசிந்தது. கசிந்த ரசாயனம் மேலும் வழிந்து பரவுவதைத் தடுக்க, தீயணைப்பு வீரர்கள் அதை வடிகால் பகுதிக்குத் திசைத் திருப்பி விட்டதாக Ashrul Riezal Ashbar மேலும் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!