புத்ராஜெயா, அக்டோபர் 2 – 11 ஆண்டுகளுக்கு முன்பு லாஹாட் டத்துவில் ஊடுவி, நாட்டின் மாமன்னருக்கு எதிராகப் போர் தொடுத்ததற்காக, எழு பிலிப்பைன்ஸ் ஆடவர்களுக்கு, இன்று நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.
49 வயது தொடங்கி 75 வயதுடைய இந்த பிலிப்பைன்ஸ் ஆடவர்களின், மேல் முறையீடுகளை நிராகரித்து, இன்று கூட்டரசு நீதிமன்றம் இம்முடிவை எடுத்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில், பிப்ரவரி 12 மற்றும் ஏப்ரல் 10ஆம் திகதிகளில் லாஹாட் டத்துவின் கம்போங் டான்டுவோவில் (Kampung Tanduo) ஆயுதம் ஏந்திய இந்த ஊடுருவல் குழுவுடன் ஏற்பட்ட மோதலின் போது ஒன்பது மலேசிய பாதுகாப்புப் பணியாளர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.