
கோலாலம்பூர், ஏப்ரல் 22 – தலைநகரைச் சுற்றியுள்ள லைசென்ஸ் இல்லாத வெளிநாட்டு வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் லைசென்ஸ் இல்லாமல் வணிகங்களை நடத்திய வெளிநாட்டவர்கள் மீது 13 பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நடவடிக்கை ஜாலான் லெபு புடு,ஜாலான் துன் டான் சியூ சின், ஜாலான் பெட்டாலிங் மற்றும் ஜாலான் சுல்தான் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக ஜாலான் லோம்போங் பறிமுதல் கிடங்கு, தாமான் மிஹார்ஜா, செராசுக்கு எடுத்துச் செல்லப்பட்டன ।.
இத்தகைய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்க https://adukl.dbkl.gov.my என்ற இணைப்பை தொடர்புக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது
Action, against, unlicensed, foreign traders,