
சிரம்பான், செப்- 29,
தனக்கு அறிமுகமான 14 வயது இளம் பெண்ணை கடந்த மாதம் கற்பழித்த குற்றத்திற்காக 21 வயதுவரை ஹென்ரி கெர்னி ( Henry Gurney) சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும்படி 18 வயது இளைஞனுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குற்றத்தை அந்த இளைஞன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த இளைஞனுக்கு நீதிபதி டத்தின் சுரியா புடின் இந்த உத்தரவை பிறப்பித்தார். புக்கிட் ராசா, ஜாலான் ராசாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த ஆகஸ்டு மாதம் 19ஆம்தேதி காலை மணி 9.35 அளவில் அந்த இளைஞன் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றப்
பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
கூடியபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 376 (1) விதியின் கீழ் அந்த இளைஞன் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டான். அகப்பக்கத்தின் மூலம் அறிமுகமான அந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதை அந்த இளைஞன் ஒப்புக்கொணடான். பாதிக்கப்பட்ட அந்த பெண் கெடாவிலிருந்து பஸ் மூலம் சிரம்பானுக்கு வந்ததாக கூறப்பட்டது.