Latestமலேசியா

விரைவுப் பேருந்து வேக வரம்புத் தடுப்புப் பட்டையை மோதியது; 7 பேர் காயம்

சிரம்பான், ஜூலை-5 – சிரம்பான் அருகே உயர வரம்பு பட்டையை விரைவுப் பேருந்து மோதிய சம்பவத்தில், ஓட்டுநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

புக்கிட் மக்கோத்தா நோக்கிச் செல்லும் ஜாலான் அராப் மலேசியன் சாலையில் இன்று விடியற்காலை அவ்விபத்து ஏற்பட்டது.

19 பயணிகளை ஏற்றியிருந்த அப்பேருந்து காஜாங்கிலிருந்து மலாக்கா சென்றுகொண்டிருந்தது.

காயமடைந்தவர்களில் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 4 ஆண்களும் 3 பெண்களும் ஆவர். அவர்களுக்கு செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!