Latestமலேசியா

விழுந்து காயமடைந்த பிறகு கால்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் – மகாதீர் பேட்டி

ஸ்ரீ கெம்பாங்கான், ஏப்ரல்-15-கீழே விழுந்து காயமடைந்தப் பிறகு தனது கால்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் கூறியுள்ளார்.

“நிற்க முடிந்தாலும், எனக்கு கால்கள் இல்லாதது போல உணர்கிறேன்” என்றார் அவர்.

ஜனவரியில் கீழே விழுந்த விபத்தில், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு மற்றும் சிறிய தலைக்காயம் ஏற்பட்டது.

அதிலிருந்து அவர் தொடர் சிகிச்சை பெற்று வருவதுடன், உடற்பயிற்சி சிகிச்சை மூலம் மீள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும், பழையபடி நடமாடுவது இன்னும் சவாலாகவே உள்ளது.

எனினும் 100 வயது மகாதீர் உற்சாகம் குறையாமல் தொடர்ந்து physiotherapy உடற்பயிற்சி சிகிச்சை பெற்று வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!