
போகோத்தா, ஜூலை.02- வெனிசுவேவின் வட பகுதியை கடந்த ஜூன் 24 ஆம் தேதி உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,295 ஆக உயர்ந்துள்ளது. 11,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சட்டமன்றத் தலைவர் அறிவித்துள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பேரிடன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. 12,000 க்கும் அதிகமானோர் தத்தம் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியமர்த்தப்பட்ட 4,000-க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியிருந்த 6,461 பேரை வெற்றிகரமாக மீட்டுள்ளனர். மீட்பு மற்றும் தேடல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் அதிகமானோரை உயிருடன் மீட்க முடியும் என Jorge Rodriguez நம்பிக்கை தெரிவித்தார்.
ரிக்டர் அளவையில் 7.2 மற்றும் 7.5 எனப் பதிவான இரு வலுவான நிலநடுக்கங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பகுதியில் 782 தொடர் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல் மற்றும் நகராட்சியின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனினும் தற்போது அதிர்வுகள் குறைந்து நிலைமைச் சீரடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



