
கோலாலம்பூர், மார்ச் 4 – வேல் வேல் சுலோகத்தை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அஸ்ட்ரோவின் கீழ் செயல்படும் ஏரா வானொலி தொகுப்பாளர்கள் மூவருக்கு ஒலிபரப்பு பணியில் ஈடுபடுவதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
Nabil Ahmad, Azad Jazmin, மற்றும் Radin ஆகிய மூன்று தொகுப்பாளர்ளுக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருவதால் அவர்களை தற்காலிகமாக ஒலிபரப்பு பணியில் ஈடுபடுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அஸ்ட்ரோ ஆடியோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதோடு சம்பந்தப்பட்ட மூன்று அந்த மூன்று தொகுப்பாளர்கள் ERA சமூக ஊடக தளத்தில் வீடியோவை பகிர்ந்தது குறித்து வருத்தம் அடைவதாகவும் அஸ்ட்ரோ ஆடியோ தெரிவித்துக் கொண்டது.
சம்பந்தப்பட்டவர்களின் செயல் பலரின் மனதை காயப்படுத்தியிருப்பதோடு அவர்கள் ஏமாற்றமும் அடைந்துள்ளதால் நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம்.
அதோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று தொகுப்பாளர்களும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொறுப்பான ஒலிபரப்பு நிலையம் என்ற ரீதியில் அவர்களின் செயலை நாங்கள் கடுமையாக கருதுகிறோம்.
அதோடு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அனைத்தும் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்றும் அஸ்ட்ரோ ஆடியோ தெரிவித்துள்ளது.