Latestஉலகம்

ஷங்ஹாயில் கட்டுமானத் தளத்தில் அகலமாக உள்வாங்கிய சாலையால் பரபரப்பு; வைரலாகும் வீடியோ

ஷங்ஹாயில் கட்டுமானத் தளத்தில் அகலமாக உள்வாங்கிய சாலையால் பரபரப்பு; வைரலாகும் வீடியோ

பெய்ஜிங், பிப்ரவரி-14,

சீனா, ஷங்ஹாயில் பெரிய அகலத்திற்கு நிலம் உள்வாங்கி சாலையையும் கட்டடத்தையும் விழுங்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்ஹாயின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் திடீரென அந்த பெரும் பள்ளம் தோன்றியது.

இதனால் சாலையின் ஒரு பகுதியையும் அருகிலிருந்த கட்டுமானங்களையும் நிலம் விழுங்கியது.

பள்ளம் தோன்றிய சிறிது நேரத்திற்குள் அப்பகுதி வேகமாக நீரால் நிரம்பியது.

எனினும் இதுவரை உயிர் சேதம் பதிவாகவில்லை.

என்றாலும், அருகிலுள்ள அலுவலகக் கட்டடங்களும் குடியிருப்புகளும் பாதுகாப்புப் கருதி காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ காட்சிகள், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய நில அமிழ்வு சம்பவங்கள், நிலத்தடி அமைப்புகள், தளர்ந்த மண், அல்லது கட்டுமானப் பிழைகள் காரணமாக ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!