Latestமலேசியா

ஷா ஆலாம் அடுக்குமாடியில் இருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழப்பு

ஷா ஆலாம், மார்ச்-25-சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 19-ல் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.

இச்சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்தது.

குடியிருப்பின் கீழ்தளத்தில் மயக்க நிலையில் இருந்த சிறுவனை பொது மக்கள் கண்டு உடனடியாக ஷா ஆலாம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

ஆனால், மாலை 5.40 மணியளவில் சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சிறுவன் முதலில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்ததாக சந்தேகிக்கப்பட்டாலும், மேல் விசாரணையில் அது ஏழாவது மாடி என உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை என்றும், தற்போதைக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

மரணத்திற்கான உண்மைக் காரணத்தை கண்டறிய உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!