
பெட்டாலிங் ஜெயா செப்டம்பர் 22- நீதிமன்றத்தில் ஜாரா கைரினா மகாதீர் மரண விசாரணை (inquest) நடைபெற்று கொண்டிருக்கும்போது வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால் அளித்த கருத்துக்கள் காரணமாக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சட்டத்துறை அலுவலகம் (AGC) தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஷாஃபி ஆற்றிய உரையை ஆய்வு செய்து வருவதாகவும், தேவையானால் சட்டத்தின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் எனவும் AGC எச்சரித்துள்ளது.
இத்தகைய கருத்துக்கள் பொதுமக்களிடையே தவறான புரிதலை உருவாக்கும் என்றும், மேலும் நடைபெற்று வரும் நீதிமன்ற செயல்முறையை பாதிக்கக்கூடும் என்று அது கூறியது.
மேலும் பொதுமக்கள் நீதிமன்ற விசாரணைகளில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என்றும் AGC நினைவூட்டியது.
உயிரிழந்த ஜாரா கொலை செய்யப்பட்டிருக்கின்றாள் என்பதனை ஷாஃபியின் வைரல் காணொளியில் பகிங்கரமாக கூறியிருந்தார்.
விசாரணையில் தலையிட முயற்சிக்கும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை தலைவர் முன்பே எச்சரிக்கை விடுத்து, வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது