Latestஉலகம்

ஸ்பெயியில் துயரம்; அதிவேக இரயில்கள் மோதியதில் 68 பேர் பலி

மெட்ரிட், அக்டோபர்-29,ஸ்பெயினில் இரண்டு அதிவேக பயணிகள் இரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் குறைந்தது 68 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் மெட்ரிட்டுக்கு அருகிலுள்ள Toledo மாநிலத்தில், நேற்று காலை இந்த விபத்து நிகழ்ந்தது.

தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் இரயிலின் பின்புறத்தில் மற்றொரு அதிவேக இரயில் மோதியதில், சில பெட்டிகள் தடம்புரண்டு பள்ளத்தில் விழுந்தன.

இரண்டு இரயில்களிலும் மொத்தம் 544 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குக் காரணமாக மனிதத் தவறும் இரயில்வே சமிக்ஞை முறையில் ஏற்பட்ட கோளாறும் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட ஸ்பெய்ல் பிரதமர் Pedro Sanchez, அலட்சியம் அல்லது இரயில்வே பாதுகாப்பு அமைப்பில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஒரே ஆண்டில் இரண்டு பெரிய அதிவேக இரயில் விபத்துகள் நிகழ்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று முதல் 31-ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!