
செர்டாங், அக்டோபர்-30,
சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கனில் Blue Water தோட்டத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் சாலையோரத்தில் கைகள் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் பொது மக்கள் ஒருவரிடமிருந்து புகார் கிடைத்ததாக செர்டாங் போலீஸ் கூறியது.
இறந்தவர் சுமார் 144 சென்டி மீட்டர் உயரம், தோள்பட்டை வரை நீளமுள்ள பொன்னிற முடி, நீண்ட விரல் நகங்கள் மற்றும் இரண்டு காதுகளிலும் வெள்ளி காதணிகள் அணிந்திருந்தார்.
இந்நிலையில்,
கொலை குற்றத்திற்கான தண்டனைச் சட்டமான 302-ஆவது பிரிவின் கீழ் விசாரணைகள் தொடங்கியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் இருந்தால், பொது மக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையம் அல்லது செர்டாங் போலீஸ் தலைமையகத்தை 03-8074 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



