
வாஷிங்டன், ஏப்ரல்-15-ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானில் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அடுத்த 48 மணி நேரங்களில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைத் தொடங்க வாய்ப்புள்ளதாக, New York Post ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அப்பேட்டியின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு மீண்டும் செல்ல வாய்ப்பில்லை என்று கூறிய ட்ரம்ப், சில நிமிடங்களிலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
மத்தியஸ்த முயற்சியில் பாகிஸ்தான் இராணுவ தளபதி அசிம் முனிர் (Asim Munir) மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால், இஸ்லாமாபாத் திரும்ப அமெரிக்கக் குழு அதிக ஆர்வம் காட்டுவதாக ட்ரம்ப் கூறிக் கொண்டார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
வரும் 48 மணி நேரங்களில் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



