பேஜர் (Pager), Walkie Talkie உட்பட அனைத்து தொடர்பு சாதனங்களும்
2000ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் தொழிற்நுட்ப தரத்திற்கு ஏற்ப சான்றிதழை கொண்டிருக்க வேண்டும் . மின்சார பாதுகாப்பு, மின்காந்த இணக்கத்தன்மை, இயங்குதன்மை மற்றும் ரேடியோ அதிர்வெண்களின் பயன்பாடு ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கிய மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப குறியீடுகள் அல்லது தரநிலைகளுடன் தொடர்பு சாதனங்கள் இணங்குவதை உறுதி செய்வதே சான்றிதழின் நோக்கமாகும் என தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷில் தெரிவித்திருக்கிறார்.
“ஒவ்வொரு சான்றளிக்கப்பட்ட உபகரணமும் MCMC அல்லது பதிவுசெய்யப்பட்ட சான்றிதழ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் குறி அல்லது லேபிளைக் காட்ட வேண்டும் . தொடர்பு உபகரணங்களில் ஏற்படும் மாற்றங்கள், வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழையும் ரத்து செய்ய வழிவகுக்கும் என்று அவர் கூறினார். . பயங்கரவாத நோக்கத்திற்காக தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர்பு அமைச்சின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பெரிக்காத்தான் நேசனல் சிக் (Sik) நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் தர்மிசி சுலைமான் ( Ahmad Tarmizi Sulaiman) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது பாமி இத்தகவலை வெளியிட்டார்.