
அமெரிக்கா, அக்டோபர் 1 – அமெரிக்கா கலிஃபோர்னியாவிலுள்ள Six Flags Magic Mountain கேளிக்கைப் பூங்காவின் பிரபல ரோலர் கோஸ்டர் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
இந்த ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த சிலருக்கு கடுமையான மூளை பாதிப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. கடந்த ஜூலை மாதம் இரண்டு பெண்கள் பயணம் செய்தபோது, அவர்களுக்கு கடுமையான மூளை காயம் ஏற்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜூலை மாதம் முதல் மூடப்பட்டிருந்த ரோலர் கோஸ்டரை நிரந்தரமாக மூடுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரோலர் கோஸ்டர் 2008-ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமானோர் அதில் பயணம் செய்துள்ளனர்.
மேலும், 100-க்கும் மேற்பட்டோர் இந்த ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தபோது காயமடைந்ததாக வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டு இந்த ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த 22 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.



