
கோலாலம்பூர், அக்டோபர் 1 – மலேசியாவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 10 பகுதிகளில் காற்று மாசு அளவு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
காற்று மாசு குறியீட்டு மேலாண்மை அமைப்பான APIMS வெளியிட்ட தகவலின்படி, ஜோஹான் செத்தியாவில் அதிகபட்சமாக 157 என்ற காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஷா ஆலம் 156, நீலாய் 153 என்ற அளவைப் பதிவு செய்துள்ளன.
புத்ராஜெயா மற்றும் கிள்ளானில் தலா 152, செராஸில் 151, சிரம்பானில் 130, போர்ட்டிக்சனில் 117, பத்து மூடாவில் 110, பெட்டாலிங் ஜெயாவில் 109 என்ற அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.
மேலும், 54 பகுதிகளில் காற்று மாசு அளவு மிதமான நிலையில் இருப்பதாக APIMS தெரிவித்துள்ளது.



