Latestமலேசியா

இந்தியச் சமூகப் பெருந்திட்டத்தைச் செயல்படுத்தக் காத்திருப்பது ஏன்? சாஹிட்டுக்கு ராயர் கேள்வி

கோலாலம்பூர், நவம்பர்-29,மலேசிய இந்தியச் சமூகத்திற்கான Blueprint பெருந்திட்டத்தைச் செயல்படுத்த, தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணைப் பிரதமர் என்ற முறையில், டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அத்திட்டத்தை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு சென்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து உடனடியாகச் செயல்படுத்த முடியும் என அவர் கூறினார்.

நேற்றைய ம.இ.கா பொதுப் பேரவையில், இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான புதிய பெருந்திட்டத்தைத் பாரிசான் உருவாக்கும் என சாஹிட் அறிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த ராயர், இந்தியச் சமூகத்திற்கு மேலும் அறிவிப்புகளும் வாக்குறுதிகளும் தேவையில்லை என்றார்.

மாறாக, உறுதியான நடவடிக்கைகள், போதிய நிதி ஒதுக்கீடு, தெளிவான இலக்குகள் மற்றும் அளவிடக்கூடிய பலன்களே தேவை என அவர் வலியுறுத்தினார்.

கல்வி, சமூக உள்ளடக்கம் உள்ளிட்ட விவகாரங்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கால் மலேசிய இந்தியச் சமூக Blueprint அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்வி, சமூக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அப்பெருந்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!