Latestஉலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் திட்டமிட்டபடி போட்டியிடுவார்

வாஷிங்டன் , ஜூலை 4 – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் திட்டமிட்டபடி போட்டியிடுவார் என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெரின் ஜீன் பியர் ( Karine Jean Pierre ) உறுதிப்படுத்தினார்.

அதிபர் தேர்தலிருந்து ஜோ பைடைன் விலகும் திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லையென அவர் கூறினார். அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டோனல்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் முடிவிலிருந்து ஜோ பைடும் விலகிக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு கெரின் ஜீன் பதில் அளித்தார்.

அதே வேளையில் எதிர்காலத்தில் ஜோ பைடன் எடுக்கும் முடிவு குறித்து தாம் விளக்கம் அளிக்க முடியாது என அவர் கூறினார். நாட்டு மக்களின் நலன் விவகாரங்களில் அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருவதாக கெரின் ஜீன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!