
கோலாலாம்பூர், மார்ச்-5-நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான வணக்கம் மலேசியா, புத்ராஜெயாவில் பணிபுரியும் இந்திய அரசாங்க ஊழியர்களின் சங்கமான இமயமுடன் (IMAYAM) முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
வணக்கம் மலேசியா அலுவலகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் அதன் நிர்வாக இயக்குர் தியாகராஜன் முத்துசாமியும் ‘இமயம்’ தலைவர் Dr சத்திஷ் குமாரும் அதில் கையெழுத்திட்டனர்.
80-ஆம் ஆண்டுகளில் அரசுப் பணியில் சுமார் 10 விழுக்காடாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கைப் படிப்படியாகக் குறைந்து தற்போது 3.5 விழுக்காடாக மட்டுமே உள்ளது.
அதனை அதிகரிக்க உதவும் நோக்கில் அரசு வேலை வாய்ப்பு வழிகாட்டல், வேலை வாய்ப்புக் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை இமயம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நம் மக்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், வணக்கம் மலேசியாவுடன் இமயம் தற்போது கைக்கோர்த்துள்ளது.
இந்த ஒத்துழைப்பு குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த தியாகராஜன், அரசாங்கத் தகவல்களையும் கொள்கைகளையும் மக்களிடத்தில் கொண்டுசேர்க்கும் முயற்சியை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றார்.
முன்னணி மின்னியல் தமிழ் ஊடகம் என்ற வகையில், இந்த விழிப்புணர்வை முன்னெடுப்பதில் வணக்கம் மலேசியா பெரும் பங்காற்றும் என, புத்ராஜெயா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவருமான சத்திஷ் சொன்னார்.
தியர்கள் திறமைசாலிகள்; ஆனால் பெரும்பாலான் சமயங்களில் அரசுத் துறைகளில் ஆர்வம் இல்லாமல் அல்லது ஆர்வம் இருந்தும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தெரியாமல் இருக்கின்றனர்.
ஆக, இமயம் – வணக்கம் மலேசியா இடையிலான இந்த MoU பரிமாற்றம், இந்த உன்னத விழிப்புணர்வு முயற்சிக்கு பெரும் கைக்கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.



