பெட்டாலிங் ஜெயா, மே 30 – ஆசியா மொபிலிட்டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து சேவை தொடர்புடைய முழு விவரங்களை வெளியிட சிலாங்கூர் அரசாங்கம் தயாராக இருப்பதாக, மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
DRT எனப்படும் டிமாண்ட்-ரெஸ்பான்சிவ் ட்ரான்சிட் திட்டத்திற்கான குத்தகையை திறந்த முறையில் அல்லாமல், இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
அதில், இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவின் கணவர் எம். ராமச்சந்திரனின் ஆசியா மொபிலிட்டி நிறுவனமும் ஒன்றாகும்.
அதனால், ஆசியா மொபிலிட்டி நிறுவனம் குறித்த முழு விவரங்களையும் வெளியிடுமாறு நேற்று C4 எனும் ஊழல் மற்றும் குரோனிசத்தை எதிர்த்துப் போராடும் மையம் சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தது.
அதற்கு அமிருடின் இன்று ஒப்புக் கொண்டுள்ளார்.
தகவல் சுதந்திரம் இருப்பதால், அவ்விவரங்களை வெளியிடுவதில் தமது தரப்புக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லையெனவும் அமிருடின் கூறியுள்ளார்.