
கோலாலம்பூர், ஜூலை-8 – மாட்சிமைத் தங்கிய மாமன்னரை இழிவுப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட இல்லத்தரசி அண்மையில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இது, ஆட்சியாளர்களை அவதூறுகளிலிருந்தும் வரம்பு மீறிய விமர்சனங்களிலிருந்தும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் உறுதிபாட்டை நிரூபிக்கிறது.
பேச்சுரிமை என்பது, வெறுப்புணர்வை விதைப்பதற்கும் நாட்டின் இறையாண்மையின் அடையாளமாகத் திகழும் மாமன்னரை இழிவுப்படுத்துவதற்கான ‘டிக்கெட்’ கிடையாது என்பதகு இதுவே சாட்சியாகும்.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் எல்லையில்லா சமூக ஊடகத் தொடர்பில், இணையம் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டியது அனைவரின் கடமையாகும்.
தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்ட விளைவுகளைக் கொண்டு வரும் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.
எனவே, பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் வகையில் சமூக ஊடகங்களையும் பிற டிஜிட்டல் தளங்களையும் தவறாகப் பயன்படுத்துவோர் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸுடன் இணைந்து கண்காணிப்பும் வலுப்படுத்தப்படுமென, தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC கூறியுள்ளது.
சமூக ஊடகப் பயனர் என்ற வகையில், இணையப் பாதுகாப்பை உறுதிச் செய்வது நமது கூட்டுப் பொறுப்பு என்பதை அனைவரு உணர வேண்டும்.
மலேசியர்களுக்கே உரித்தான பண்புடனும் சட்டத்திட்டங்களை மதித்தும் நாம் நடந்துகொள்ள வேண்டுமென MCMC நினைவுறுத்தியது.