பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 29 – இரண்டு நாட்களுக்கு முன்பு, கோலாலம்பூர், செராஸ் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல்லா சானி அப்துல் ஹமீட் (Abdullah Sani Abdul Hamid), துப்பாக்கி வைத்திருந்தது குறித்து கேள்விகள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து விளக்கமளித்த கோலாலம்பூர் கால்பந்து சங்கத்தின் தலைவருமான அப்துல்லா சானி, தான் 2012ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
ஒரு உரிமையாளராக ஆயுதங்களை எப்போதும் கவனமாக வைத்திருப்பதை உறுதி செய்வதும் முக்கியம் என்று தன் தரப்பு கருத்தை முன்வைத்துள்ளார்.
‘ஆயுதத்தை எங்கும் விடக்கூடாது. எனவே மைதானம் மட்டுமல்ல, எங்குச் சென்றாலும் அதை எடுத்துச் செல்கிறேன்’ என்று அவர் தனது X தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்துல்லா சானி, துப்பாக்கி போன்ற ஒரு பொருளை எடுத்துச் செல்வதைக் காட்டும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.