Latestமலேசியா

ஆரோக்கியமான வாழ்வுக்கு ‘LaSella Gold’ பாஸ்மதி அரிசி; Jasmine Food அறிமுகம்

கோலாலாம்பூர், ஏப்ரல்-17-ஆரோக்கியமான உணவு முறையை விரும்பும் மலேசியர்களுக்காக, Jasmine Food Corporation அதன் புதிய ‘லாசெல்லா கோல்ட்’ (LaSella Gold) எனும் பிரீமியம் இரக பாஸ்மதி அரிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்த glycemic (GI) குறியீடு கொண்ட பாஸ்மதி அரிசி, இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிக்க உதவுவதால், நவீன கால வாழ்க்கை முறைக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும்.

குறிப்பாக, இந்த ‘லாசெல்லா கோல்ட்’ அரிசி இயற்கையான முறையில் முதிர்ச்சியடையச் செய்யப்பட்டதால், உணவுக்குத் தனித்துவமான நறுமணத்தையும் சுவையையும் வழங்குகிறது.

பிரியாணி, நெய் சோறு போன்ற பாரம்பரிய உணவுகளுக்கு ஏற்ற வகையில் நீண்ட மற்றும் மென்மையான அரிசி இரகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

தரம் மற்றும் ஆரோக்கியத்தில் சமரசம் செய்ய விரும்பாத பயனீட்டாட்டாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தச் செய்யவே இந்தத் தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, Jasmine Food தெரிவித்துள்ளது.

இந்த அறிமுகத்தைக் கொண்டாடும் வகையில், ‘Beli Beras, Menang Emas அதாவது அரிசி ‘வாங்கினால் தினமும் தங்கம் வெல்லலாம்’எனும் சிறப்புப் போட்டியையும் Jasmine Food அறிவித்துள்ளது.

வரும் மே 1 முதல் ஜூலை 2 வரை ஜேஸ்மின் அல்லது Beras Era தயாரிப்புகளை 30 ரிங்கிட்டுக்கு மேல் வாங்குபவர்கள் தினமும் தங்கம் வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதோடு, தங்கத்தையும் பரிசாக வெல்ல மலேசியர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!