கோலாலம்பூர், செப்டம்பர்-30, இணையம் வாயிலாக முன்பதிவு செய்யக்கூடிய பாலியல் சேவைகளை வழங்கிய கும்பலொன்றின் நடவடிக்கையை, கோலாலம்பூர் போலீஸ் முறியடித்துள்ளது.
4 ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பாலியல் தொழிலாளர்கள் என்று நம்பப்படும் 11 வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் அவர்களை கொண்டுச்சென்று விடுபவர்களாகச் (transporters) செயல்பட்ட நான்கு உள்ளூர் ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
கைதானப் பெண்கள், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனீசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 21 முதல் 47 வயதிலானவர்கள் ஆவர்.
www.klescort69.com என்ற இணையத்தளம் வாயிலாக முன்பதிவுச் செய்யப்படும் ஒரு மணி நேர சேவைக்கு, வாடிக்கையாளர்களுக்கு 400 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது.
அதே 4 மணி நேரங்கள் என்றால் 750 ரிங்கிட்டும் 7 மணி நேரங்களுக்கு 1,100 ரிங்கிட்டும், 11 மணி நேரங்களுக்கு 1,700 ரிங்கிட்டும் கட்டணமாக விதிக்கப்படுகிறது.
ஹோட்டல் அறைகள் தவிர்த்து, பேச, சாப்பிட, குடிக்க மற்றும் நடனமாடுவதற்காக நடத்தப்படும் தனிப்பட்ட விழாக்களுக்கும் (private parties) பெண்கள் தருவிக்கப்பட்டு வந்துள்ளது, கோலாலம்பூர் போலீசின் விசாரணையில் கண்டறியப்பட்டது.