![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/MixCollage-06-Jan-2025-05-36-PM-1576.jpg)
கோலாலம்பூர், ஜனவரி 6 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக, ம.இ.கா தேசிய துணை துலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையில் பத்துமலை திருத்தலத்தில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவிருந்த நஜீப் ஒருமைப்பாட்டு பேரணியை அம்னோ கட்சி திடீரென ரத்துச் செய்ததைத் தொடர்ந்து, ம.இ.கா கட்சி திட்டமிட்டபடி பத்துமலையில் இப்பேரணியை நடத்தி தங்களின் ஆதர்வை வெளிப்படுத்தியது.
இது அரசியல் நிகழ்ச்சி அல்ல; டத்தோ ஸ்ரீ நஜிப்பின் நலனை வேண்டியும், அவருக்கான நீதியை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனை மட்டுமே என்று டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
விநாயகர் கோவிலில் நடைபெற்ற இந்த பிரார்த்தனைக்குப் பிற்கு, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான மண்டபத்தில் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சி மாட்சியமை தங்கிய மாமன்னரின் ஆணைக்கு எந்த வகையிலும் முரண்பாடாக இல்லாது, ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் ஒரு அமைதி பேரணியாகும் என்று ம.இ.காவின் உதவி தலைவர் எம். அசோஜன் தெரிவித்தார்.
இதனிடையே, இப்பேரணியில் கலந்து கொண்ட ம.இ.கா உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒன்று திரண்டதாக வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 3,000 க்கும் மேற்பட்ட ம.இ.கா உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.