
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-7 – பினாங்கு, Persiaran Gurney சாலையில் உள்ள பேரங்காடியின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து தலையில் காயமடைந்த அமெரிக்க சுற்றுப்பயணியின் உடல் நிலை சீராக உள்ளது.
25 வயது அவ்வாடவர் பினாங்கு பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார்.
தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Abdul Rozak Muhammad அதனை உறுதிப்படுத்தினார்.
சுற்றுப்பயணம் செய்வதற்காக பிப்ரவரி 1-ஆம் தேதி குடும்பத்தோடு அவர் மலேசியா வந்துள்ளார்.
வந்த இடத்தில் காதலியுடன் அவருக்குப் பிரச்னை ஏற்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் போலீஸிடம் கூறினர்.
பிப்ரவரி 12-ல் அவர்கள் தாயகம் திரும்பவிருந்ததும் தெரிய வந்தது.
அவ்வாடவர் இன்னமும் சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவில்லை .
முன்னதாக, நேற்று முன்தினம் மதியம் 1.55 மணியளவில் அவ்வாடவர் ஏழாவது மாடியிலிருந்து விழுந்தார்.
அரை சுயநினைவோடு கிடந்தவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.