Latestமலேசியா

இந்தியாவில் 20 பேரை கொன்ற யானை -வேட்டையாடும் நடவடிக்கை தீவிரம்

பாட்னா, ஜன 14 – ஜார்க்கண்ட் காடுகளில் குறைந்தது 20 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு காட்டு யானையை இந்திய வனவிலங்கு அதிகாரிகள் வேட்டையாடி வருவதாக கிராமவாசிகள் மற்றும் அதிகாரிகள் ரிவித்தனர்.

பலரைக் கொன்ற இந்த வெறிபிடித்த யானையைக் கண்டுபிடித்து மீட்க முயற்சி செய்கிறோம் என்று அரசாங்க வன அதிகாரி ஆதித்ய நாராயண்
(Aditya Narayan) ஏ.எப் .பியிடம் தெரிவித்தார். இதன்வழி அந்த யானையினால் தாக்கப்பட்டு 20பேர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இறந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவர், அதே போல் யானைப் பாகன் ஒருவனும் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை முதல் பல முறை ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த யானை கண்டுபிடிக்கப்படவில்லை. அண்டை மாநிலமான ஒடிசாவில் உள்ள தேசிய சரணாலயம் உட்பட அடர்ந்த வனப்பகுதிகளில், டுரோன்களின் உதவியுடன் தேடுதல் குழுக்கள் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் பண்ணைகளை விட்டு வெளியேறவோ அல்லது இரவில் வீட்டிற்குள் இருப்பதற்கு பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் என கிராமத் தலைவர் பிரதாப் சாச்சர் ( Pratap Chachar) கூறியுள்ளார்.

கிராம மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்காக ஒரு போலீஸ் குழு அல்லது வன அதிகாரி வாகனம் இரவில் வருகை தருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!