Latestமலேசியா

இந்த ஆண்டு சீன ஆரம்ப பள்ளிகளில் 41,133 மலாய் மாணவர்கள் சேர்க்கை

கோலாலம்பூர், ஜூலை 1 – நாடு முழுவதுமுள்ள சீன ஆரம்ப பள்ளிகளில் (SJKC), இந்த ஆண்டு மே 31-ஆம் தேதி நிலவரத்தின்படி 41,133 மலாய் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இது மொத்த மாணவர் சேர்க்கையில் 9.01 விழுக்காடாகும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டில் 34,870 அதாவது 6.84 விழுக்காடாக இருந்த மலாய் மாணவர்களின் சேர்க்கை, ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

அதேவேளை, தமிழ் பள்ளிகளில் (SJKT) இந்த ஆண்டு மே 31 வரை 320 அதாவது 0.41 விழுக்காடு மலாய் மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!