
சூரிக்- ஜூலை-20 – எதிர்காலப் பேரழிவை தவிர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மனிதக் கழிவுகளைப் பதப்படுத்தி வருகின்றனர்.
2018-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த மைக்ரோபையோட்டா வால்ட் (Microbiota Vault) திட்டம், 2029-க்குள் 10,000 மனிதக் கழிவு மாதிரிகளை சேகரிக்க இலக்குக் கொண்டுள்ளது .
தற்போது சூரிக் பல்கலைக்கழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேமிக்கப்பட்டுள்ளன;
திட்டக்குழு இதற்கான நிரந்தரமான, குளிரான இடமாக கனடா அல்லது சுவிட்சர்லாந்தைப் பரிசீலித்து வருகிறது. மனிதக் கழிவுகளுடன் கூடவே, 200 வகையான புளிக்க வைக்கப்பட்ட உணவுகளும் சேமிக்கப்பட்டுள்ளன.
தவிர, சுற்றுச்சூழல் நுண்ணுயிரிகளையும் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மனிதன், விலங்கு, தாவர மற்றும் சுற்றுச்சூழலிலுள்ள நுண்ணுயிரிகளை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்; காரணம் இவை நோய்த் தடுப்பு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பை மீட்டெடுக்க உதவக்கூடியவை.
மனிதச் செயல்களால் நுண்ணுயிரிகளின் இழப்பு அதிகரித்து, ஒவ்வாமை, தானாக ஏற்படும் நோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு வழிவகுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.