Latestமலேசியா

இன்று அதிகாலை 3.15 மணியளவில் கேமரன் மலையில் நிலச்சரிவு; முக்கிய சாலையைத் தடுப்பு

கோலாலம்பூர், ஜன 6 – இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால்  Simpang  Pulai- யிலிருந்து கேமரன் மலைக்கு செல்லும் முக்கிய பாதையான  ஜாலான் கம்போங் ராஜா (Kampung Raja), புளூவேலி (Blue valley) சந்திப்புக்கு அருகில் தடை ஏட்பட்டுள்ளது. கேமரன் ஹைலேண்ட்ஸ்சில் பாதுகாப்புப் படை இன்று  அதிகாலை மணி 3.15 க்கு தகவல்  பெற்றதை தொடர்ந்து  நிலைமையை மதிப்பிடுவதற்கும் உதவி வழங்குவதற்கும் குழுவை பாதிக்கப்பட்ட பகுதிக்கு  அனுப்பப்பட்டது . நிலச்சரிவால் இரு திசைகளிலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏட்பட்டிருக்கும் நிலையில்  தற்போது பாதிக்கப்பட்ட பகுதியில் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக   முகநூல்லில்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையெ கேமரன் ஹைலேண்ஸ் செல்வதற்கு  லிப்பிஸ் (Lipis) வழியாக   Sungai   Koyan அல்லது  Tapah  சாலை வழியாக மாற்று வழிகளை பயன்பபதுமாரு  சாலையைப் பயனர்கலுக்கு அரிவுருதப்படுகிரது.நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து பெய்த  கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது . இந்த நிலச்சரிவினால் வீடு அல்லது உய்ர் செதம் எதுவும் ஏற்பட்டதாக இன்னும் தகவல் கிடைக்கவில்லை .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!