Latestமலேசியா

இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து

கோலாலாம்பூர், மார்ச்-11-“ஜீரோவாக இருப்பவர்கள் ஹீரோவாக முயல வேண்டாம்” என மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக இன-மத விவகாரங்கள் தொடர்பில் “சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது. அதற்கென அதிகாரம் படைத்த போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்” என்றார் அவர்.

சட்டத்தை மீறி தனிப்பட்ட முறையில் செயல்படுவது, நிலைமையை மோசமாக்கி நாட்டின் இன, மத ஒற்றுமையை பாதிக்கும் என்றும், மலேசியாவின் நல்லிணக்கத்தை குலைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

நேற்றிரவு கோலாலம்பூரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது சிவகுமார் அவ்வாறு சொன்னார்.

அந்நிகழ்வில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பெருநாள் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

மலேசிய ஸ்ரீ ராமஜெயம் நலச் சங்கமான PERAMA, MAHIMA, Team DSK மற்றும் ஹைதராபாத் உணவகம் இணைந்து நடத்தும் வருடாந்திர நிகழ்வு இதுவாகும்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!