
தங்காக், செப்டம்பர்-1 – ஜோகூர் மாநில ம.இ.காவின் சமயப் பிரிவு ஏற்பாட்டில் இந்துக்களே ஒன்றிணைவோம் என்ற சமய சொற்பொழிவு நிகழ்வு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 10 மாவட்டங்களில் 24 இடங்களில் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் கடந்த வாரம் தங்காக் நடைபெற்ற நிகழ்வை, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம். அசோகன் தொடக்கி வைத்தார்.
அவர் தமதுரையில், இது போன்ற சமயம் சார்ந்த முயற்சிகளை முன்னெடுத்த ரவின் கிருஷ்ணசாமி தலைமையிலான மாநில ம.இ.காவின் முயற்சியைப் பாராட்டினார்.
ஒழுக்கத்தைப் பேணும் அவசியம் குறித்தும் பகடிவதை போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விட்டொழிக்க விழிப்புணர்வு குறித்தும் அசோஜன் பேசினார்.
ம.இ.கா முன்னெடுத்துள்ள இந்நடவடிக்கையை வரும் காலங்களில் தேசிய அளவில் மற்ற பொது இயக்கங்களும் தொடர வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இரவு 7 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, சொற்பொழிவு, தீபாராதனை, சிற்றுண்டி என நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூர் மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.