Latestமலேசியா

இறந்தவரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் தீப்பற்றிய படகு; மரண விளிம்பிலுருந்து தபிய போலீஸ், தற்காப்புப் படை & நிருபர்

கோத்தா கினபாலு, மார்ச் 2 -இன்று அதிகாலை, சபா தஞ்சோங் Aru கடற்கரையின் பாறைகளில் இறந்து கிடந்த ஒருவரின் உடலை எடுத்துச் சென்றபோது, ​​படகு தீப்பிடித்து எரிந்ததில் போலீஸ் அதிகாரிகள், APM எனப்படும் மலேசிய பொது தற்காப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகை நிருபர் ஒருவர் பரபரப்பான தருணத்தை எதிர்கொண்டனர்.

அதிகாலை மணி 2.40க்கு நடந்த அந்த சம்பவத்தில், மீட்கப்பட்ட சடலம் விசாரணைக்காக கோத்தா கினபாலு கடற்கரை கோபுரத்திற்கு கொண்டு செல்ல ஒரு படகில் ஏற்றப்பட்டு திரும்பும் வழியில், அப்படகின் இயந்திரம் திடீரென செயல் இழந்ததோடு , அதன் இயந்திம் தீப்பிடித்தது .

அதன்பிறகு படகில் இருந்த APM உறுப்பினர்கள் உடனடியாக Marin படகைத் தொடர்பு கொண்டதால் அவர்கள் அப்படகில் மாற்றப்பட்டு கோத்தா கினபாலு நகர மண்டபம் படகுத் துறைக்கு அனுப்பப்பட்டனர்.

அந்த தீவிபத்தில் படகின் இயந்திரம் கடுமையாக சேதமடைந்த நிலையில் APM அதிகாரிகளில் இருவர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி சொற்ப காயத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே மீட்கப்பட்ட ஆடவரின் உடல் பாதுகாப்புடன் கரைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!