
டெட்ரொய்ட் , ஜூலை 2 – அமெரிக்கா, Detroit நகரிலுள்ள Gratiot Avenue பகுதியில் பணமழை கொட்டியதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டரிலிருந்து அமெரிக்க டாலர்கள் மற்றும் ரோஜா இதழ்களை கொட்டும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
வானிலிருந்து கொட்டப்பட்ட ரொக்கத்தின் மதிப்பு சுமார் 25,000 ரிங்கிட் என கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால், பலர் தங்களது கார்களை நிறுத்திவிட்டு கீழே விழுந்த டாலர்களை எடுக்க குவிந்ததில் Gratiotட்டில் சாலையின் ஆறு பாதைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது.
விசாரித்ததில், இறந்த ஒருவரின் ஆசையை நிறைவேற்றும் வகையிலெர் இப்படி செய்யப்பட்டதாம்.
இறந்தவர் வாழ்நாள் முழுவதும் தாராள மனப்பான்மை கொண்ட கார் கழுவும் நிறுவனத்தின் உரிமையாளர் Darrel Thomas என அடையாளம் கூறப்பட்டது.
தன்னுடைய இறுதிச் சடங்கில் இவ்வாறு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவரின் குடும்பத்தினர் இச்செயலை செய்துள்ளனர்.
இதனிடையே, வைரலான காணொளியின் கீழ் இச்செயலை கண்டித்து, பணத்தை இப்படியா தூக்கி வீசுவது, தன்மையான முறையில் கைகளில் ஒப்படைத்திருக்கலாம், அல்லது வேறு வழியில் ஏழை எளியவர்களிடம் அப்பணம் சேரும் வண்ணம் ஏற்பாடு செய்திருக்கலாம் என பல்வேறான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.