கோலாலம்பூர், டிச 20 – தாய்லாந்தின் பட்டாயாவில் இல்லாத ஹோட்டல் திட்டத்தில் முதலீடு செய்ததால் சொத்துடமை முகவரான ஆடவர் ஒருவர் 85,000 ரிங்கிட் இழந்தார். பாதிக்கப்பட்ட 37 வயதுடைய அந்த நபர் Tether வகை கிரிப்டோகரன்சி வடிவத்தில் 20,000 யூனிட் அமெரிக்க டாலருக்கு சமமான 85,000 ரிங்கிட் ஏமாற்றப்பட்டார் என தென் ஜோகூர் மாவட்ட போலீஸ் தலைவர் ரவுப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம், ஹோட்டல் நிர்மாணத் திட்டம் தொடர்பாக 35 முதல் 39 வயதுடைய இரண்டு வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களுடன் நேருக்கு நேர் முதலீட்டை வழங்கியதன் மூலம் இந்த சம்பவத்தினால் அந்த சொத்துடமையாளர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த சொத்துடமை மேம்பாட்டாளர் ஜூலை 8 அன்று, 20,000 USDT கிரிப்டோகரன்சியை சந்தேக நபருக்கு சொந்தமான மற்றொரு கணக்கு உரிமையாளருக்கு மாற்றினார். இப்பணத்தை செலுத்திய பிறகு பாதிக்கப்பட்டவருக்கு எந்தவிதமான வருமானம் மற்றும் முதலீட்டு லாபம் கிடைக்காததை தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார். இதனிடையே 20,750ரிங்கிட்டிற்கு மேல் ஏமாற்றப்பட்டதாக ஒரு சிகையலங்கார நிபுணரிடமிருந்து இல்லாத முதலீடு தொடர்பான மற்றொரு புகாரையும் காவல்துறை பெற்றதாக ரவூப் கூறினார். வாட்சாப்
புலனத்தில் அறிமுகமான மற்றொரு நபரிடம் அந்த பெண் பணத்தை இழந்துள்ளார்.