புத்ரா ஜெயா, ஏப்ரல் 9 – கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் பெருமளவு சரிவுக் கண்டுள்ளது.
முதல் வாரத்தில் மட்டுமே 17,256 சம்பவங்கள் பதிவான நிலையில், 14-வது வாரமான மார்ச் 31- ஏப்ரல் 6 வரைக்குமானக் காலக்கட்டத்தில் 97.1% சரிந்து வெறும் 493 சம்பவங்களே பதிவாகியுள்ளன.
அதோடு, ஆண்டின் தொடக்கத்தில் 32 கோவிட் மரணங்கள் பதிவுச் செய்யப்பட்ட நிலையில் 14-வது வாரத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.
இது 95.5% சரிவு என சுகாதார தலைமை இயக்குனர் Dr Muhammad Radzi Abu Hassan கூறினார்.
கோவிட் தொற்று குறைந்து விட்டதே என மக்கள் மெத்தனத்தில் இருந்து விடக் கூடாது.
குறிப்பாக இந்த விழாக்காலத்தில் அதிகமானோரைச் சந்திப்பது உள்ளிட்ட வெளித் தொடர்புகள் அதிகம் இருக்கும் என்பதால், எந்நேரமும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நெரிசலான இடங்களில் சுவாசக் கவசம் அணிவதும், அடிக்கடி Sanitizer கொண்டு கைகளைச் சுத்தம் செய்வதும் முக்கியம் என்றார் அவர்.