கெய்ரோ, ஏப் 11 – காஸாவில் புதன்கிழமையன்று இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் Hamas தலைவர் Ismail Haniyeh வின் மூன்று மகன்களும், இரண்டு பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர். காஸாவின் Al-Shati முகாம் பகுதியில் Ismail Haniyehவின் மகன்களான Hazem, Amir மற்றும் Mohammad காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்களது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் Haniyehவின் இரண்டு பேரக் குழந்தைகளும் மரணம் அடைந்த வேளையில் மூன்றாவது பேரக்குழந்தை காயம் அடைந்தததாக Hamas தரப்பும் Haniyehவின் குடும்பத்தினரும் தெரிவித்தனர். எங்கள் கோரிக்கைகளை நாங்கள் விட்டுக்கொடுகும் பேச்சுக்கே இடமில்லை.
பேச்சுவார்த்தையின் உச்சக்கட்டத்திலும், இயக்கம் தனது பதிலை அனுப்புவதற்கு முன்பும், எனது மகன்களை குறிவைப்பது, ஹமாஸை தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்குத் தள்ளும் என்று இஸ்ரேல் நினைத்தால், அது ஏமாந்துவிடும் என Haniyeh அல் ஜசீரா டிவியிடம் தெரிவித்தார். எங்கள் மக்களின் இரத்தத்தை விட எனது மகன்களின் இரத்தம் பிரியமானது அல்ல என வளைகுடாவில் Qatarரில் வசித்துவரும் Haniyeh கூறியுள்ளார்.