Latestமலேசியா

இஸ்லாம் மதத்தை அவமதித்த பதிவு; குற்றவாளிக்கு RM5,000 அபராதம்

கூலிம், மே-14-இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 51 வயதுடைய ஆடவருக்கு கூலிம் நீதிமன்றம் 5,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.

நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை வாசிக்கப்பட்டபோது அந்த ஆடவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பதிவு ஒன்றை ஜனவரி 16ஆம் தேதி அந்நபர் வெளியிட்டதாக கூறப்பட்டது.

இந்த வழக்கு மலேசிய குற்றச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டது.

அபராதத்தை செலுத்தத் தவறினால் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் பின்னர் அபராதத் தொகையை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!