Latestமலேசியா

தற்போது T20 பிரிவினருக்கான RON95 மானியம் தொடரும் – அந்தோனி லோக்

செர்டாங், மே-14–உயர்வருமானம் பெறும் T20 பிரிவினருக்கான RON95 பெட்ரோல் மானியம் தற்போது நிறுத்தப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

“பூடி மடானி RON95” (Budi Madani RON95) திட்டத்தில் இப்போது எந்த மாற்றமும் இல்லை என்றும் தற்போதைய முறைதான் தொடரும் என்றும் அவர் கூறினார்.

MyKad மூலம் மலேசியர்கள் எளிதாக பெட்ரோல் மானியத்தை பெறும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் சிரமப்படாத எளிய முறையையே அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

T20 பிரிவினருக்கான மானியத்தை நீக்குவது குறித்து சமீபத்தில் பலர் கவலை தெரிவித்திருந்தனர். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால், சில M40 மற்றும் T20 குடும்பங்களும் பொருளாதார சுமையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, T20 பிரிவினருக்கான RON95 மானியத்தை நிறுத்தினால், அரசாங்கம் மாதத்திற்கு சுமார் 1.5 ரிங்கிட் பில்லியன் வரை சேமிக்க முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!