
குவந்தான், மே 15 – குவந்தான் மாவட்டத்தில் மார்ச் 7 மற்றும் ஏப்ரல் 27ஆம் தேதிவரை ECRL எனப்படும் கிழக்குக்கரை வழித்தடத்திற்கான ஏழு கேபல் திருட்டுக்களில் சம்பந்தப்பட்ட ACU (ஆச்சு) கும்பலை போலீசார் முறியடித்தனர்.
ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆம்தேதிக்கிடையே கைது செய்யப்பட்ட 29 மற்றும் 44 வயதுடைய ஐந்து சந்தேக பேர்வழிகள் இக்கும்பலில் தொடர்பு இருப்பதாக பஹாங் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயூப்( Azry Akmar Ayob ) கூறினார்.
குவந்தான் மாவட்டத்தில் கம்போங் பண்டான், ஜெயா காடிங், சுங்கை லெம்பிங் மற்றும் Beserah ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில் ACU கும்பல் கைது செய்யப்பட்டனர்.
இக்கும்பலைச் சேர்ந்தவர்களில் நால்வர் கேபல்கள் திருடுவதிலும் மற்றொரு சந்தேகப் பேர்வழி கேபல்களை வாங்குபவர் என Azry குறிப்பிட்டார்.
Gebeng, Kotasas மற்றும் Panching ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள ECRL வழித்தட இடங்களில் சுமார் 4,200 மீட்டரைக் கொண்ட சிக்னலை வெளிப்படுத்தும் 500,000 ரிங்கிட் மதிப்புள்ள கேபல்களை அவர்கள் திருடியுள்ளனர்.
இக்கும்பலிடமிருந்து டொயோட்டா இன்னோவா கார், ECRL கேபிள் உறை, உலோக வெட்டும் கருவிகள் மற்றும் ஒரு கைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதோடு ஐந்து சந்தேக நபர்களும் தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 117-இன் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



