
மெட்ரிட், மார்ச் 5-ஈரானை தாக்கும் அமெரிக்காவுக்கு உதவ முடியாது என ஸ்பெய்ன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக நடவடிக்கை அச்சுறுத்தல்கள் நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நட்பு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்ததை அடுத்து, ஈரானை தாக்குவதற்கு தனது இராணுவ தளத்தைப் பயன்படுத்துவதற்கு ஸ்பெயின் தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் வட்டார மோதலைத் தூண்டியதைத் தொடர்ந்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ( Pedro Sanchez ) போர் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது ராணுவ தளத்தைப் பயன்படுத்துவது, மத்திய கிழக்கில் போர் மற்றும் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் குறித்த நாட்டின் நிலைப்பாடு மாறவில்லை என ஸ்பெய்ன் வெளியுறவு அமைச்சர் Jose Manuel லும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடரந்து ஸ்பெயினை ஒரு பலவீனமான நட்பு நாடு என்று வர்ணித்து, அந்நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அச்சுறுத்தினார்.
பழிவாங்கும் பயத்தில், உலகிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எங்கள் மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு முரணான எதிலும் நாங்கள் கூட்டுச் சேர மாட்டோம் என Pedro Sanchez கூறினார்.



