Latestஉலகம்

ஈரான் தாக்குதல்: கட்டாரின் முக்கிய எரிவாயு மையம் கடும் சேதம்

டோஹா, மார்ச்-19-ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், கட்டாரில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு மையமான Ras Laffan கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

பல ஏவுகணைகள் தடுக்கப்பட்டாலும், ஓர் ஏவுகணை எப்படியோ இலக்கைத் தாக்கி தீ விபத்தையும் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தியதாக அதிகாரிகள் கூறினர்.

இத்தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கட்டார் அரசு தெரிவித்துள்ளது.

ஈரானின் South Pars எரிவாயு தளத்தின் மீது நடந்த தாக்குதலுக்குப் பதிலடியே இந்தக் தாக்குதல் என கருதப்படுகிறது.

இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுப் படைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்படும் என தெஹ்ரான் ஏற்கானவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Ras Laffan உலகளாவிய LNF எரிவாயு விநியோகத்தில் முக்கிய பங்காற்றுவதால், இந்த சம்பவம் உலக எரிசக்தி சந்தைகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இந்தக் ஆகக் கடைசி நிலவரத்தால் நிலைமை மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!