Latestமலேசியா

உங்களைக் காப்பாற்றும் நிலைக்கு உயர்ந்ததும் திரும்புவேன்” – தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு 14 வயது சிறுவன் மாயம்

ஷா ஆலாம், ஜூலை-1-சிலாங்கூர், ஷா ஆலாலமில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போன 14 வயது சிறுவனைத் தேடும் பணியைப் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அச்சிறுவன் தனது தாயாருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான்.

​ஷா ஆலாம், செக்ஷன் 16-ல் உள்ள ரிம்பா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த Muhammad Shazriq Ziqri Abdullah, ஜூன் 23-ஆம் தேதி காலை மணி 6.45-க்கு கடைசியாக தனது வீட்டில் காணப்பட்டுள்ளான்.

​தாயாருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது.

தான் புறப்படும் முன் எழுதிய கடிதத்தில், _”உங்களைக் காப்பாற்றும் தகுதி எனக்கு வரும்போது நான் மீண்டும் வருவேன்”_ என அவன் குறிப்பிட்டுள்ளான்.

அதோடு, அன்பு காரணமாகவே வீட்டை விட்டுச் செல்வதாகவும், மனம் வெறுத்து அல்ல என்றும் அப்பையன் கடிதத்தில் எழுதியுள்ளான்.

​இது குறித்து ஜூன் 24-ஆம் தேதி புகார் பெறப்பட்டதை உறுதிப்படுத்திய ஷா ஆலாம் மாவட்டப் போலீஸ் தலைவர் ACP Sarudin Samah, போலீஸார் சிறுவனின் நண்பர்கள் வட்டாரத்திலும் அவன் வழக்கமாகச் செல்லும் இடங்களிலும் தேடி வருவதாகக் கூறினார்.

​பொது மக்கள் அச்சிறுவனைப் பற்றிய ஏதேனும் விவரங்கள் அறிந்திருந்தால், உடனடியாக ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தையோ அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ராசி சஹாரியை (Inspector Mohd Razi Sahari) 019-571 7076 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!