பெய்ஜிங், பிப் 21 – குளிர் கால ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திய சீனா அடுத்து உலகக் கிண்ண காற்பந்து போட்டியை ஏற்று நடத்துவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக புதிய காற்பந்து விளையாட்டரங்குகளை நிர்மாணிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபரும் காற்பந்து விளையாட்டின் தீவிர ரசிகருமான Xi Jinping தெரிவித்தார்.
உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு ஒருமுறை மட்டுமே 2002 ஆம் ஆண்டு சீனா தேர்வு பெற்றது. அந்த போட்டியில் சீனக் குழுவினர் ஒரு ஆட்டத்தில்கூட வெற்றி பெறவில்லை என்பதோடு ஒரு கோல் கூட அடிக்கவில்லை. உலகக் கிண்ண காற்பந்து போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கு முன் வலுவான காற்பந்து குழுவை சீன உருவாக்க வேண்டும் என அந்நாட்டின் காற்பந்து ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இவ்வாண்டு கட்டாரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் சீனாவின் கனவு இம்மாதம் வியட்னாமிடம் 3 -1 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்வியினால் சிதைந்தது.