Latestமலேசியா

உள்நாட்டு வருவாய் வாரியத்தின் அதிரடி நடவடிக்கை; 52,540 பேர் தாங்களாகவே முன்வந்து RM4.07 பில்லியன் வருமானத்தை ஒப்படைத்தனர்

புத்ராஜெயா, ஜூன்-20 – வரி செலுத்துவோர், அதனை முறையாகச் செலுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதில், உள்நாட்டு வருவாய் வாரியமான HASiL, அதன் புதிய e-Invoicing திட்டத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

​வரி செலுத்துவோரின் நிதிப் பரிவர்த்தனைகளில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறியும் அதிநவீன தரவு பகுப்பாய்வு முறையை HASiL பயன்படுத்தியது.

இதன் விளைவாக, வருமானத்தை முறையாகச் சமர்ப்பிக்காத 52,540 வரி செலுத்துவோர் தாங்களாகவே முன்வந்து தங்களின் உண்மையான வருமானத்தை தாக்கல் செய்துள்ளனர்.

இதன் மூலம், மொத்தம் 4.07 பில்லியன் ரிங்கிட் வருமானம் கணக்கில் கொண்டு வரப்பட்டு, அரசாங்கத்திற்கு 1.009 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வரிப்பணம் வசூலாகியுள்ளது.

​கடந்த 2024 ஆகஸ்ட் முதல் e-Invoicing அமுல்படுத்தப்பட்டதில் இருந்து, இதுவரை 230,000-க்கும் அதிகமான வரி செலுத்துவோர், 1.505-க்கும் அதிகமான e-Invoice-களைச் சமர்ப்பித்துள்ளனர்.

​இருப்பினும், இவ்வாண்டு ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்த 10,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு e-Invoice வழங்கத் தவறுவது மற்றும் தாமதமாகச் சமர்ப்பிப்பது போன்ற விதிமீறல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

​எனவே, விடுபட்ட முந்தைய பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் உடனடியாகத் தங்களின் திருத்தங்களைச் செய்யுமாறு HASiL அறிவுறுத்தியுள்ளது.

தவறும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வாரியம் எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!