மலேசியா – சிங்கப்பூர் இடையே தொழிலாளர் துறை ஒத்துழைப்பு வலுப்படும்: டத்தோ ஶ்ரீ ரமணன் அறிவிப்பு

சிங்கப்பூர், ஆகஸ்ட்-8-மலேசியாவும் சிங்கப்பூரும் தொழிலாளர் துறை சார்ந்த தங்களின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கான அலுவல் பயணத்தின் போது அக்குடியரசின் ஆள்பலத் துறை இடைக்கால அமைச்சர் ஜாஸ்மின் லாவ் (Jasmin Lau) உடன் நடத்திய சந்திப்பில், கிக் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
AI மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டன.
மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழிலாளர் கொள்கைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டுமெனவும் ரமணன் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்புக்கு முன் சிங்கப்பூரிலுள்ள ‘கிராப்’ நிறுவனத் தலைமையகத்திற்கும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.



